திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளியில் வரலாறு மற்றும் பயாலஜி பிரிவு மாணவர்களிடையே தகராறு இருந்து வந்துள்ளது. அதாவது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ பதிவிட்டது தொடர்பாக இரு பிரிவு மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று மீண்டும் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதால் இருதரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்டனர்.

அப்போது கத்தி போன்ற ஆயுதங்களையும் மாணவர்கள் பயன்படுத்தினர். இதில் 12-ம் வகுப்பு மாணவர் ஒருவர் அரிவாளால் வெட்டியதில் சக மாணவர் ஒருவரின் கைவிரல் துண்டானது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வரலாற்று ஆசிரியர் தகராறை  நிறுத்த முயற்சி செய்தார். அப்போது அவரை  தலையில் அரிவாளால் வெட்டினர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதோடு கைவிரல் துண்டான மாணவனின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.