
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெஞ்சல் புயலாக வலுப்பெற்ற நிலையில் இன்று மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்க இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு சென்னை உட்பட 7 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். இன்று காலை முதல் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் புயல் கரையை கடக்கும் போது 90 km வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு புதுச்சேரி மற்றும் தமிழகம் ஆகிய பகுதிகளுக்கு தேசிய பேரிடர் மீட்புபடை விரைந்துள்ளது. புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது உதவி எண்களை அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் மழை தொடர்பான புகார்களுக்கு பொதுமக்கள் உடனடியாக இந்த போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று அறிவித்துள்ளது.
அதன்படி மாநில உதவி எண் 1070, மாவட்ட உதவி எண் 1077, whatsapp-ல் 9445869848 ஆகிய நபர்களுக்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கலாம். மேலும் ஆபத்தான நேரத்தில் பொதுமக்களுடன் உடனடியாக இந்த நம்பருக்கு தொடர்பு கொள்ளால் தேவைப்படும் உதவிகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.