தமிழக பகுதிகளின் மேல் ‌ ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு‌ தென் தமிழகம், வட தமிழகம், புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்றும் நாளையும்  இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் இதே போன்ற நாளை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.