தமிழகத்தில் இதுவரை 29 கட்சிகளைச் சேர்ந்த 640 பேச்சாளர்களுக்கு நட்சத்திர அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற கட்சிகள் 40 பேரையும், மற்றவை 20 பேரையும் நட்சத்திரப் பேச்சாளர்களாக அறிவிக்கலாம். முதலாவதாக திமுக நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலை வழங்கியது. அதில், முதல்வர் ஸ்டாலின் உட்பட 40 பேர் இடம்பெற்றுள்ளனர். தொடர்ந்து, பாஜக அளித்த பட்டியலில் ஓபிஎஸ், டிடிவி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்