திருநெல்வேலி மற்றும் மேலப்பாளையம் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் திருச்செந்தூர் மற்றும் நாகர்கோவில் செல்லும் 25 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் ஒன்பது விரைவு ரயில்கள் பிப்ரவரி 11 முதல் பிப்ரவரி 21 வரையும், திருநெல்வேலி மற்றும் செங்கோட்டை இடையே இயக்கப்படும் விரைவு ரயில் பிப்ரவரி 15 முதல் பிப்ரவரி 20 வரையும், தூத்துக்குடி மற்றும் வாஞ்சி மணியாச்சி இடையே இயக்கப்படும் விரைவு ரயில்கள் பிப்ரவரி 11 முதல் பிப்ரவரி 20 வரையும் ரத்து செய்யப்படுகிறது.

அதனைப் போலவே திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் விரைவு ரயில், புனலூர் மற்றும் நாகர்கோவில் விரைவு ரயில், நாகர்கோவில் மற்றும் தாம்பரம் அதிவிரைவு ரயில், திருநெல்வேலி மற்றும் மேட்டுப்பாளையம் விரைவு ரயில் ஆகியவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 25 ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பயணிகள் அதற்கு ஏற்றது போல தங்கள் பயணங்களை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.