தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால பகுதிகளில் வானிலை மாற்றம் நிலவுவதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் மேல் பகுதியில் மேலடுக்கு வளிமண்டல சுழற்சி மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கீழடுக்கு வளிமண்டல சுழற்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கமாக, இன்று (செப்டம்பர் 17) மாநிலத்தின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்சு அலர்ட்அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
