தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி, தருமபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, ஈரோடு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்கள இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.