தமிழகத்தில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு தொடக்கப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதில் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச சீருடை, உணவு, பாட புத்தகம், கல்வி உபகரணம் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கொரோனா கால கற்றல் இடைவெளியை போக்கும் விதமாக இல்லம் தேடி கல்வித் திட்டம் என்ற திட்டம் தொடங்கப்பட்டது.

மேலும் காலை சிற்றுண்டி திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலமாக மாணவர்களுடைய கற்றலை மேம்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு டேப்லெட் எனப்படும் கையடக்க கணினி வழங்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது . இது குறித்து ஆலோசனையும் நடந்து வருகிறது என்று கூறப்படுகிறது.