வருடம் தோறும் வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள். இதற்காக சிறப்பு ரயில்கள், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது . அந்த வகையில் சென்னை டு தாம்பரம் வேளாங்கண்ணி -தாம்பரம் இடையே சிறப்பு கட்டணத்துடன் கூடிய சிறப்பு ரயில் இந்த வருடம் இயக்கப்பட உள்ளது.

அதன்படி தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இன்று இரவு 9 மணிக்கு புறப்பட இருக்கும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 4.30 மணிக்கு வேளாங்கண்ணி வந்தடையும். மறு மார்க்கத்தில் 29ஆம் தேதி இரவு ஏழு முப்பது மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் அதிகாலை 3:15 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

அதேபோல்இன்று முதல் செப்டம்பர் 9ஆம் தேதி வரை சென்னை, திண்டுக்கல், மதுரை, திருச்சி, மணப்பாறை, தஞ்சாவூர், கும்பகோணம், பூண்டி மாதாகோவில், ஒரியூர், சிதம்பரம், புதுச்சேரி, மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டிணம், நாகூர் காரைக்கால் ஆகிய முக்கிய ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.