தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதனைப் போலவே மயிலாடுதுறை மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 35 வயது வரை உள்ள பொதுப் பிரிவினரும் வியாபார தொழில் செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதி திட்டத்தின் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் திட்ட மதிப்பீட்டில் பொதுப் பிரிவினர் பத்து சதவீதம் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மகளிர் மட்டும் திருநங்கைகள் 5 சதவீதம் பங்களிப்பை செலுத்த வேண்டும். வியாபார தொழில்களுக்கு இந்த திட்டத்தில் 5 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். மேலும் திட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் 25% அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய 04364-212295 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.