தமிழகத்தில் அக்டோபர் மாதம் பருவமழை தொடங்கிய நிலையில் கொசு உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. கழிவு நீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் கடிக்கும் போது மனிதனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மழைக்காலங்களில் சாலைகளில் தேங்கும் மழை நீர் மற்றும் கழிவு நீர் காரணமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனை தடுக்க தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இது தொடர்பாக பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், தமிழகத்தில் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாகவும் பொதுமக்கள் காய்ச்சல் பரிசோதனை செய்ய சனிக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் சுமார் 2000 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.