
தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனைக்கு பிறகு தமிழக டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளதாக செய்தி வெளியிட்டது. இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பூதாகரமான பிரச்சினையாக வெடித்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் டாஸ்மாக் ஊழலுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக பாஜகவினர் டாஸ்மாக் ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருவதோடு டாஸ்மாக் கடைகளுக்கு சென்று ஸ்டாலினின் போட்டோவை ஒட்டுகிறார்கள்.
இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படும் நிலையில் தற்போது எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான GROK AI தொழில்நுட்பத்திடம் டாஸ்மாக் ஊழலில் முதல்வர் ஸ்டாலினுக்கு எவ்வளவு பங்கு உள்ளது என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த கேள்விக்கு முதல்வர் ஸ்டாலினுக்கு டாஸ்மாக் ஊழலில் நேரடி தொடர்பு இல்லை. இருப்பினும் அமலாக்கத்துறை இடைத்தரர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது என்று பதில் வழங்கியுள்ளது. டாஸ்மாக் ஊழலில் முதல்வர் ஸ்டாலினுக்கு தொடர்பு இல்லை என்று கிராக் ஏஐ பதில் வழங்கியுள்ளது தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.
