நேற்று நடந்த தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் அரசின் கொள்கைக்கு மாறாக தமிழக அரசால் தயாரிக்கப்பட்ட அறிக்கையை படிக்காமல் புறக்கணித்தது மிகவும் வருத்தமான விஷயம். அதோடு அச்சடிக்கப்பட்ட உரையை படிக்காத ஆளுநரின் உரையை உடனடியாக நீக்கி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் கூறினார். அதன்படி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு ஆளுநர் உடனடியாக அவையை புறக்கணித்துவிட்டு சென்றார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சட்டப்பேரவையில் நடந்த பிரச்னை குறித்து பேசிய எச்.ராஜா. தமிழகத்தில் முழுவதுமாக ஜனாதிபதி ஆட்சியை கொண்டுவர அவசியமில்லை, குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் ஜனாதிபதி ஆட்சியை கொண்டுவரலாம் என்றார். மேலும், பேரவையில் தேசியகீதம் பாடும் முன்பே ஆளுநர் கிளம்பிவிட்டார். தேசியகீதம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பாடம் எடுக்க அவசியம் இல்லை என்றார்.