இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன. அதனால் ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு விடுமுறை குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி முன்னதாக வெளியிட்டு வருகிறது. மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் மே மாதத்தில் மொத்தம் ஏழு நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது. மே 1 உழைப்பாளர்கள் தினம் விடுமுறையாகும். இத்துடன் ஏப்ரல் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறையாகும். மே 11 மற்றும் மே 25 இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் விடுமுறையாகும். இதற்கு ஏற்ப உங்கள் நிதி தேவையை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.