இந்தியாவில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் மூலமாக எந்த மாநிலத்தை சேர்ந்தவரும் அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் ரேஷன் பொருள்களை வாங்கிக் கொள்ள முடியும் என அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் தேவையான ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்வது நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்த திட்டத்தின் படி பிற மாநிலத்தவர்களுக்கு ரேஷன் பொருள்களை மறுக்காமல் வழங்க வேண்டும் என்று மாவட்ட வளங்கள் அலுவலர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் பிற மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள எந்த ஒரு ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்களை வாங்க வந்தாலும் பொருள் இல்லை என்று மறுக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.