புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ‌ மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற 19ஆம் தேதி உருவாக இருக்கிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று மற்றும் நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழையும் கோவை மற்றும் நீலகிரியில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

இதேபோன்று ஜூலை 19ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் சென்னையை  பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.