தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம் பி பி எஸ் மற்றும் பி டி எஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் செயல்முறை கடந்த ஜூலை 12ஆம் தேதி உடன் நிறைவடைந்தது.இந்நிலையில் தகுதியான மாணவர்களின் தரவரிசை பட்டியலை சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் அமைச்சர் சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார்.

மேலும் பொது கலந்தாய்வில் விழுப்புரத்தை சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் 720 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். தர்மபுரி பச்சையப்பன் 565 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடமும், காஞ்சிபுரம் முருகன் 560 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.