தமிழகத்தில் சமீபத்தில் மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில் அதனை திரும்ப பெற வைப்பதற்கு மானிடரசு இரு வேறு வாய்ப்புகளை பயன்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைமையகத்திற்கு மேல்முறையீடு செய்யவும்,அதற்கு அடுத்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் முறையிடுவதற்கும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதே சமயம் தமிழகத்தில் மேலும் 10 அரசு மருத்துவக் கல்லூரிகளும் ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. ஆனால் மேல் முறையிட்டியின் மீது தீர்வு காண இரண்டு மாதங்கள் வரை அவகாசம் உள்ளதால் அதற்குள் மருத்துவ கலந்தாய்வு நிறைவடைந்து விடக்கூடும். இதனை கருதி அவசரத் தீர்வு வழங்குமாறு தமிழக அரசு கோரிக்கை விடுத்தால் அதனை ஏற்ற தேசிய மருத்துவர் ஆணையம் மூன்று கல்லூரிகளில் உள்ள 500 எம்பிபிஎஸ் இடங்களுக்கும் மாணவர் சேர்க்கையை நடத்த வழிவகை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.