தமிழகத்தில் அரசு திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு அரங்குகளில் மது அருந்து அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது. தற்போது இது குறித்து பேசி உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, திருமண மண்டபங்களில் மது அருந்து அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

திருமண மண்டபங்களில் மது அருந்த ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது. சர்வதேச தரத்திலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் விளையாட்டு மைதானங்களில் மது அருந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகளின் போது மற்ற மாநிலங்களில் மது அருந்து அனுமதி வழங்கப்படுகிறது. அவ்வகையில் தான் சேப்பாக்கம் மைதானத்திற்கும் மது அருந்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் அதற்கான அனுமதி கட்டணம் இருப்பிடத்தை பொறுத்து மாறுபடுகின்றன. அதன்படி மாநகராட்சி ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய், ஒரு நாளுக்கு 11 ஆயிரம் ரூபாய், நகராட்சி ஒரு ஆண்டுக்கு 75 ஆயிரம் ரூபாயும் ஒரு நாளைக்கு 7 ஆயிரத்து 500 ரூபாயும் செலுத்த வேண்டும், இதனைத் தவிர பிற ஒரு ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாயும் ஒரு நாளுக்கு ஐந்தாயிரம் ரூபாய் எனவும் வணிகம் சாராத வீடு அளவிலான நிகழ்வுக்கு மாநகராட்சி 11 ஆயிரம் ரூபாயும், நகராட்சி 7500 ரூபாயும், பிற ஐந்தாயிரம் ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.