தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் 100% முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே பொது இடங்களிலும் மக்கள் அனைவரும் சரியாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் சென்னை, கோவை, செங்கல்பட்டு, சேலம், திருப்பூர் மற்றும் குமரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

தடுப்பு நடவடிக்கை எடுக்காததால் தொற்று அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இதனால் தொற்று அதிகரிக்கும் மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தீவிர படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பொது இடங்களில் தனிமனித இடைவேளையுடன் முக கவசம் அணிதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிகிறது. இருந்தாலும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனவே நாம் கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முக கவசம் அணிவதே சரியான வழி.