தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் கலைவாணன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். திருவிடைமருதூர் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து வந்தவர் கலைவாணன். நெய்குன்னம் கிராமத்தைச் சேர்ந்த இவர் நேற்று இரவு வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச மின் மோட்டாரை இயக்க சென்ற போது மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.