தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை மூலம் பெண்களுக்கு மாதம் ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமை தொகை ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும் என்று சொன்னதாக ஒரு தகவல் பரவிய நிலையில் பின்னர் அமைச்சர் அதனை மறுத்து தான் அவ்வாறு சொல்லவில்லை எனவும் தகுதியுள்ள பெண்களுக்கு மட்டும்தான் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று சொன்னதாகவும் விளக்கம் கொடுத்தார்.

இது தொடர்பாக இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, குறைகள் களையப்பட்டு தகுதியுள்ள அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்துள்ள தகுதி உள்ள பெண்களுக்கு மட்டும் தான் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் வழங்கப்படும் என்றார். மேலும் இதன் மூலம் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காது என்பது தற்போது தெளிவாகியுள்ளது.