தமிழகத்தில் மாற்று மருத்துவம் படித்து விட்டு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளிக்கும் போலி மருத்துவர்கள் கண்காணிப்பதற்காக சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அமைச்சர், செரிமானத்திற்கு உதவும் தீபாவளி லேகியம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் சித்தா, ஹோமியோபதி மற்றும் ஆயுர்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளில் பல தரப்பட்ட மக்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அதற்கான அங்கீகரிக்கப்பட்ட இளநிலை மற்றும் உதுநிலை படிப்புகள் உள்ள நிலையில் இந்த படிப்புகளை நிறைவு செய்த மருத்துவர்கள் அவரவர் துறை சார்ந்த துறையில் மட்டுமே பணியாற்ற வேண்டும். ஆனால் ஆங்கில மருத்துவம் எனப்படும் அலோபதி மருத்துவ முறைகளின் கீழ் சிகிச்சை வழங்குவது குற்றமாகும். இந்த குற்றம் கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது போன்ற விதிமுறைகளை கண்காணிக்க அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர்கள் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.