தமிழகத்தில் பீடி மற்றும் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதற்கு தனி உரிமை பெறும் நடைமுறை விரைவில் அமலுக்கு வரும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இந்த புதிய நடைமுறையில் பெட்டிக்கடை மற்றும் தேநீர் கடைகளில் தற்போது உள்ளதைப் போல இனிவரும் நாட்களில் பீடி மற்றும் சிகரெட் விற்க முடியாது. முறையாக உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே இதற்கு அனுமதி உண்டு.

அதனைப் போலவே அந்த கடைகளில் பீடி மற்றும் சிகரெட்டை தவிர்த்து வேறு எதையும் விற்கக் கூடாது. அதையும் மீறி விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர்களின் கடைகளுக்கான உரிமத்தை ரத்து செய்யவும் சட்ட நடவடிக்கை எடுக்கவும் வரைவு திட்டத்தில் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக பீடி மற்றும் சிகரெட் விற்பனையை குறைக்க முடியும் என்பதால் இன்று சர்வதேச புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.