மக்களவைத் தேர்தல் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது.  இதனை அடுத்து அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.   இந்நிலையில் தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கு பெரும் ஆதரவு உள்ளதாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் என்டிஏ கூட்டணிக்கு ஆதரவு பெருகுவதாக தெரிவித்துள்ளார். இன்று மாலை அவர் கோவை வர உள்ள நிலையில், இதனை பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் பாஜக கூட்டணியில் தமாகா, புதிய நீதி கட்சி, IJK, தமமுக உள்ளிட்ட கட்சிகளுடன், ஓபிஎஸ், டிடிவியும் இடம்பெற உள்ளனர்.