
தமிழக பாஜக கட்சியின் சார்பில் மும்மொழி கல்விக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்தும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் 90% பேர் மும்மொழி கல்விக் கொள்கைக்கு ஆதரவு கொடுக்கும் நிலையில் கடந்த 18 நாட்களில் 26 லட்சம் பேர் கையெழுத்து போட்டுள்ளனர். புதிய கல்விக் கொள்கையில் மூன்றாவது மொழி ஹிந்தி தான் கட்டாயமாக இருந்த நிலையில் அதில் திருத்தம் செய்து ஏதேனும் ஒரு இந்திய மொழியை படிக்கலாம் என்று மாற்றத்தை கொண்டு வந்தவர் பிரதமர் மோடி.
திமுக மற்றும் காங்கிர கூட்டணி ஆட்சியில் இருந்த போது மூன்றாவது மொழி ஹிந்தி தான் என்று இருந்தது. பாஜக தொடங்கிய கையெழுத்து இயக்கம் இதே வேகத்தில் சென்றால் விரைவில் இரண்டு கோடியை எட்டும். மேலும் பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி கொடுக்க மாட்டோம் என்று கூறினார்.