தமிழகத்தில் பழங்குடியினர் மற்றும் நரி குறவர்களுக்கு 1500 வீடுகள் கட்டுவதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய வீடு இல்லாத ஆயிரம் பழங்குடியினர் குடும்பங்கள் மற்றும் 500 நரிக்குறவர் குடும்பங்கள் என மொத்த 1500 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்படும் என சட்டப்பேரவையில் அரசு அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து நடப்பு ஆண்டில் ஆயிரம் பழங்குடியினர் வீடுகள் மற்றும் 500 நரிக்குறவர் குடும்பங்கள் என மொத்தம் 1500 குடும்பங்கள் பயனாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இவர்களுக்கு வீடுகள் கட்டித் தர ஏதுவாக 79 புள்ளி 28 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1500 வீடுகளை விரைந்து கட்டி முடிக்க தேவையான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.