
தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் புதிய நாட்காட்டியை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி மாணவர்களின் தனித் திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக பாட வேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதோடு பள்ளி வேலை நாட்களும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது சராசரியாக தமிழகத்தில் 210 நாட்களுக்கு பள்ளிகள் செயல்படும். ஆனால் இம்முறை கூடுதலாக 10 நாட்கள் வேலை நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெரும்பாலான சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடைபெற இருக்கிறது. மேலும் இதனால் மொத்த வேலை நாட்கள் 220 ஆக இருக்கிறது.