தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட உடைமைகளை இழந்த மாணவர்களுக்கு விலையில்லா பாடத்திட்டங்கள், நோட்டுகள் மற்றும் சீருடைகள் வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ள நிலையில் அங்குள்ள அரசு பள்ளிகளை சீரமைப்பதற்கு அரசு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், பள்ளியின் சுற்றுச்சூழலுக்கு அருகில் மாணவர்கள் செல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் புயலால் பாதிக்கப்பட்டு உடைமைகளை இழந்த மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் சீருடைகள் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.