
தமிழகத்தில் தற்போது பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் கன மழை பெய்தது. அதோடு தமிழகத்தில் மேலும் மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பருவ மழையை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அந்த அறிவிப்பில் பருவமழை தொடங்கியுள்ளதால் இனி அனைத்து பள்ளிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதன்படி மின் இணைப்புகளை கண்காணித்தல், வடிகால்களை சுத்தம் செய்தல், பள்ளியின் மேற்கூரை மற்றும் வளாகத்தில் மழை நீர் தேங்காமல் தடுக்குமாறு நடவடிக்கை எடுத்தல், பள்ளி சுற்றுச்சூழலின் தன்மையை ஆராய்தல் போன்ற பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே பழைய கட்டிடங்கள் இருந்தால் அதனை உடனடியாக இடிக்க வேண்டும் என பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்ட நிலையில் தற்போது பருவமழை தொடங்கியுள்ளதால் பள்ளிகளின் கட்டிடங்களின் தரம் உள்ளிட்டவற்றை சோதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.