தென்மேற்கு வங்க கடல் பகுதியில் தற்போது ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது. இது பெங்கல் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்த நிலையில் பின்னர் புயல் உருவாவதில் தாமதம் ஏற்பட்டது. இன்று மாலை புயல் உருவாகும் என்று தெரிவிக்கப்படிருந்த நிலையில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் புயல் உருவாக வாய்ப்பு இல்லை என்று அறிவித்துள்ளது.

இது தற்போது மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில் நாளை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிலக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது ‌ மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.