வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் நாளையும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. முன்னதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கனமழை குறித்த விடுமுறைகளை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

அந்த வகையில் நாளை கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். மேலும் இதைத் தொடர்ந்து தற்போது விழுப்புரம் மாவட்டத்திற்கும் மாவட்ட ஆட்சியர் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.