தமிழக மக்கள் நலவாழ்வுத்துறைக்காக தனியாக உருவாக்கப்பட்ட “நலம் 365” youtube சேனல் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் பயன்பாட்டிற்காக இன்று மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தொடங்கி வைத்துள்ளார். இதில் மாநில சுகாதார நலத்திட்டங்கள் ஊரக மருத்துவ சேவைகள், தொற்றுநோய் விழிப்புணர்வு, மருத்துவ கல்வி நடவடிக்கைகள், தடுப்பூசி திட்டங்கள் போன்றவை குறித்த தகவல்கள் பகிரப்படும் என கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே பொது சுகாதாரத் துறைக்காக தனியாக யூடியூப் சேனல் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது அடுத்த கட்டமாக மருத்துவம் மற்றும் மக்கள் நல வாழ்வு துறையின் முழுமையான செயல்பாடுகளை விளக்கும் விதமாக நலம் 365 சேனல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நலம் 365 சேனல் மூலமாக துறை சார்ந்த முழுமையான தகவல்கள் அனைத்தையும் பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.