நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்காக தினமும் செய்யும் உடற்பயிற்சிகளில் ஒன்று நடைபயிற்சி. காலை அல்லது மாலை நேரத்தில் குறைந்தது 30 நிமிடங்கள் ஆவது தினமும்  நடக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை கூறுகிறார்கள். இதனால் உடல் பருமன், சோர்வு உள்ளிட்ட பல வியாதிகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். தற்போது பலரும் காலை நேரங்களில் பூங்கா மற்றும் சாலைகளில்  நடை பயிற்சி செய்து வருகிறார்கள்.

இவர்களுக்கு உதவும் விதமாகவும், ஊக்குவிக்கும் விதமாகவும் புதிய சாலை அமைக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவ துறை சார்பில் நடப்போம் நலம் பெறுவோம் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன் தமிழகத்தில் விரைவில் நடப்போம் நலம் பெறுவோம் என்ற தலைப்பில் சுகாதார  நடைப்பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் சுமார் எட்டு கிலோமீட்டர் தூரத்திற்கு நடைப்பயிற்சி சாலை அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.