சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி செல்லும் விரைவு ரயில் வருகின்ற ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் ரேணிகுண்டா உடன் நிறுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 31 அதாவது வியாழக்கிழமை முதல் செப்டம்பர் இரண்டாம் தேதி வரை சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 6.25 மணிக்கு திருப்பதி செல்லும் விரைவு ரயில் ரேணிகுண்டா உடன் நிறுத்தப்படும். மறு மார்க்கமாக திருப்பதிக்கு பதில் காலை 10 புள்ளி 10 மணிக்கு ரேணிகுண்டாவில் இருந்து புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

அதனைப் போலவே செப்டம்பர் மூன்றாம் தேதி விழுப்புரத்தில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு திருப்பதி செல்லும் விரைவு ரயில் காட்பாடையுடன் நிறுத்தப்படும் எனவும் வரும் மார்க்கமாக இந்த ரயில் பிற்பகல் 1.50 மணிக்கு காட்பாடியில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருப்பதியில் இருந்து அதிகாலை 6.45, காலை 10.15 மணிக்கு காட்பாடி செல்லும் பயணிகள் சிறப்பு ரயில்களும் மறுமார்க்கமாக காட்பாடியில் இருந்து பிற்பகல் 3 மணி மற்றும் இரவு 7.50 மணிக்கு திருப்பதி செல்லும் ரயில்களும் செப்டம்பர் மூன்றாம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.