சென்னையில் துணை காவல் ஆய்வாளர் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது. சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் துணை காவல் ஆய்வாளரான ஜான் ஆல்பர்ட் வசித்து வருகின்றார். திருமணமான இவர் குடியிருப்பில் இன்று தற்கொலை செய்து கொண்டார். குடும்ப பிரச்சினை காரணமாக அவர் இந்த விபரீத முடிவை எடுத்ததாக அவருடைய மனைவி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.