தமிழகத்தில் அரசு பள்ளியில் படித்து பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்கள் உயர்கல்வியில் சேர சிறப்பு முகாம்கள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் வருகின்ற ஜூலை 28ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. துணைத் தேர்வு எழுதிய மாணவர்கள் உயர்கல்வி செல்வதற்கு ஏதுவாக ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்க்கை பெறவும் பிற உயர்கல்வி வாய்ப்புகளை பெறுவதற்கும் தகுந்த வழிகாட்டுதல்கள் முதன்மை கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.

இதற்கான முகாம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் வருகின்ற ஜூலை 28ஆம் தேதி நடைபெற உள்ளது. துணைத் தேர்வு எழுதி அனைத்து மாணவர்களும் இந்த முகாமில் தவறாமல் பங்கேற்க வேண்டும். மதிப்பெண் சான்றிதழ்களை அந்தந்த பள்ளிகளில் மாணவர்கள் பெற்ற பிறகு உடனடியாக தலைமை ஆசிரியர் அல்லது தலைமை ஆசிரியரால் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் ஆகியோர் உதவியுடன் மாணவர்களை முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அழைத்து வந்து ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் செயற்கை முகாமில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.