தமிழகத்தில் பழமை வாய்ந்த பல கோவில்கள் உள்ள நிலையில் இந்த கோவில்களில் வரலாற்று சிறப்புமிக்க பல கதைகளும் உள்ளன. அதனை தெரிந்து கொள்ள வெளிநாட்டு மக்கள் முதல் உள்ளூர் மக்கள் வரை அனைவரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் அவர்களுக்காக புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது தற்போது அனைத்து சேவைகளும் மொபைல் போனில் அடங்கிவிட்ட நிலையில் கோவில்களை பற்றி தெரிந்து கொள்வதற்கு புதிய செயலி தமிழக அரசு சார்பாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த செயலிக்கு திருக்கோவில் செயலி என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் இதில் கோவில்களை பற்றிய வரலாறு, கட்டண விவரம் மற்றும் திருவிழாக்கள் போன்ற தகவல்களை அறிந்து கொள்ள முடியும். அது மட்டுமல்லாமல் இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் வழங்கப்படும் அன்னதானம் மற்றும் கோவில் திருப்பணிகளுக்கு நன்கொடை ஆகியவை வழங்கவும் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.