தாலிக்குத் தங்கம் திட்டத்தை நிறுத்திய திமுக ஆட்சியில், தற்போது தாலிக்கே பாதுகாப்பில்லாத நிலைமை நிலவுவதாக அண்ணாமலை வேதனை தெரிவித்தார்.

இதுகுறித்து அண்ணாமலை தன்னுடைய twitter பக்கத்தில், 1998 ஆம் வருடம் கோவை குண்டுவெடிப்பில் பலியான பொது மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினேன். எளிய மக்களின் உயிரை பறித்த இந்த தீவிரவாதம் இந்த மண்ணில் எப்போதும் தலை எடுக்கக் கூடாது என்பதில் பாஜக உறுதியுடன் உள்ளது. தமிழகத்தில் பாஜக ஆட்சி வந்ததும் கோவை குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு நினைவுத்தூண் அமைக்கப்படும். அவர்களுடைய குடும்பத்தினருக்கு 1998 ஆம் ஆண்டிலிருந்து கணக்கிடப்பட்டு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும்.

2019ஐ ஒப்பிடும்போது 2021ல் கொள்ளை, கொலைகள், அதிகரித்துள்ளது. காவல்துறையைச் செயல்பட விடாமல் ஆட்சியாளர்கள் தடுக்கின்றார்கள். ISIS தீவிரவாதம் தொடர்பான NIA கைதுகள் நடக்கும்போது, தமிழகம் அமைதிப் பூங்காவாக நிலவுகிறது என்று முதல்வர் கூறுவது வேடிக்கை என்று சாடினார்.