தமிழகத்தில் வணிக வளாகங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் தானியங்கி இயந்திரம் மூலமாக மது விற்பனையை கொண்டு வந்தது அதிமுக ஆட்சியில் தான் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், திமுக ஆட்சி பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் இதுவரை 96 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது.

டாஸ்மாக் வருமானத்தைக் கொண்டுதான் அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது என செய்தி வெளியாகி வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. வணிக வளாகங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் தானியங்கி இயந்திரம் மூலமாக மது விற்பனையை முதலில் கொண்டு வந்தது அதிமுக ஆட்சியில் தான். கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் 500 மதுபான கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கணக்கெடுப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.