சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணையின் விலைகளுக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுவது போன்று, மாதந்தோறும் எரிவாயு சிலிண்டர்களின் விலையும் மாற்றம் செய்யப்படுகிறது. கடந்த மாதம் சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிகரித்த நிலையில் இந்த மாதமும் விலை அதிகரித்துள்ளது.

அதன்படி வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை கடந்த மாதம் 38 ரூபாய் வரை உயர்ந்த நிலையில் தற்போது 48 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ரூ.1903-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அதே நேரத்தில் 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் பயன்பாட்டு விலை மாற்றமின்றி  818 ரூபாய் 50 காசுகளாக இருக்கிறது ‌