
தமிழகத்தில் உள்ள ஒரு சில சிறைகளில் கைதிகளுக்கு பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக பல புகார்கள் தொடர்ந்து எழுந்த நிலையில் 18 கிளை சிறைகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பாதுகாப்பு குறைபாடு உள்ளிட்ட பல காரணங்களால் தமிழகத்தில் உள்ள மொத்தம் 18 கிளை சிறைகளை மூடுவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் அங்கு பணியாற்றிக் கொண்டிருக்கும் அதிகாரிகளும் ஊழியர்களும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே கிளைச் சிறைச்சாலைகளை மூடும் நடவடிக்கையை கைவிட்டு அவற்றின் பாதுகாப்பை அதிகரித்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.