
தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதாவது முதலமைச்சரின் தனி பிரிவில் பெறப்பட்ட புகார் மனுவில் மாணவர்களை கோடை விடுமுறையில் பள்ளிக்கு வரவழைத்து சிறப்பு வகுப்புகள் நடத்துவதால் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதாக புகார் வந்துள்ளது. எனவே மாணவர்களை கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளுக்கு அழைத்து அவர்களுக்கு அழுத்தம் தரக்கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.