தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் வட்டி இல்லாமல் கடன் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு சட்டப்பேரவையில் நேற்று பதில் அளித்து பேசி அமைச்சர் பெரிய கருப்பன், சிறு வணிகர்களுக்கு வார தவணை முறையில் திருப்பி செலுத்தும் வகையில் வட்டி இல்லா கடன் வழங்கப்படும் என கேட்கப்பட்ட போது கூட்டுறவுத்துறை மூலம் வட்டி இல்லாமல் கடன் கொடுப்பது சாத்தியமில்லாதது. மக்களின் பங்களிப்பு மூலமே கூட்டுறவு வங்கிகள் இயங்கி வருகின்றன.

பொதுமக்களின் வைப்புத் தொகை வட்டி மூலமாக பெறப்படும் தொகை ஆகியவற்றால் கூட்டுறவு வங்கிகளும் நாளைய சங்கங்களும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் வட்டியில்லாமல் கடனை கொடுப்பது என்பது சரியாக இருக்காது. கூட்டுறவுத் துறை மூலமாக விவசாய மற்றும் நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதனைப் போலவே சுய உதவி குழுக்களுக்கான கடனும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே வங்கிகள் மூலம் வட்டி இல்லாமல் கடன் கொடுப்பதற்கான முடிவுகளை துறை தன்னிச்சையாக எடுக்க முடியாது என அமைச்சர்கள் விளக்கம் அளித்துள்ளார்.