15 வருடங்களுக்கு மேலாக இயங்கும் அரசு வாகனங்களை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில் ஏற்படும் கடுமையான காற்று மாசிற்கு வாகனங்கள் தான் முக்கிய காரணமாக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக பழைய வாகனங்கள் அதிகப்படியான புகையை வெளியிட்டு வருகின்றன. எனவே காற்று மாசை குறைக்கும் விதமாக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக தற்போது பதினைந்து வருடங்களுக்கு மேலாக இயங்கும் அரசு வாகனங்களை அளிப்பதற்கு முடிவு செய்தது.

எனவே ஏப்.1 முதல் வர்த்தக ரீதியில் 15 ஆண்டுகளுக்கு மேலான பழைய வாகனங்களை நிறுத்தி வைக்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தமிழக அரசின் 1,500 பேருந்துகள் கழிவு செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் தமிழக அரசு பேருந்துகளை ஸ்கிராப் செய்வதை ஒன்றரை ஆண்டுகள் நீட்டிப்பு செய்ய வேண்டும். என மத்திய அமைச்சர் கட்கரியிடம் அமைச்சர் சிவசங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.