தமிழகத்தில் அதிமுக கட்சியில் கடந்த சில நாட்களாகவே ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் சமீபத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து உள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதனைப் போலவே இபிஎஸ் அதிமுகவை பலப்படுத்தும் வகையில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.  அதிமுகவில் பொதுச் செயலாளர் இ பி எஸ் கட்சிக்கு 2 கோடி தொண்டர்கள் இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க கோரி இபிஎஸ் தாக்கல் செய்துள்ள மனு மீது தேர்தல் ஆணையம் இன்று  பரிசீலனை செய்து முடிவை அறிவிக்க உள்ளது.டெல்லி ஹைகோர்ட் பத்து நாட்களுக்குள் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என கடந்த 12ஆம் தேதி உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜூகுமார் தலைமையில் உயர்நிலை ஆலோசனை கூட்டத்தில் இபிஎஸ் விவகாரம் குறித்து இன்று முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.