நாடு முழுவதும் புட்டாலம்மை எனப்படும் நோய் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் அதிக அளவில் பரவி வருகின்றது. தமிழகத்தில் தற்போது வரை 461 பேருக்கு இந்த நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொது சுகாதார மற்றும் தடுப்பு பரிந்துரை இயக்குனர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, புட்டாலம்மை ஏற்படுத்தும் மம்ஸ் வகை வைரஸ்கள் தன்னைத் தானே கட்டுப்படுத்தும் திறன் கொண்டவை. இந்த வைரஸ்களுக்கு மரணம் என்பதே கிடையாது. அம்மை நோய்களால் பாதிக்கப்படும் குழந்தைகளை தலைமைப்படுத்தி வைப்பது மட்டுமே இந்த நோய் தொற்றை தடுக்கக்கூடிய ஒரே வழி.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் நோய் கண்காணிப்பு திட்டத்தின் ஒருங்கிணைந்த சுகாதார தகவல் தளமானது அம்மை, தட்டம்மை, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளை பதிவு செய்யலாம். நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு நாடு முழுவதும் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் சளி தொல்லை போன்ற பிரச்சனைகள் இருக்கும்போது சுகாதார நிலையத்தை மக்கள் அணுக வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகள் கொண்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இதன் மூலமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் அவர்களின் உடல்நிலை மேலும் மோசமாவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் தகுந்த சிகிச்சை முறைகளை மக்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.