பிரதமர் நரேந்திர மோடி வரும் எட்டாம் தேதி நாட்டின் பிரதமராக பதவி ஏற்கின்றார். இந்த கூட்டத்தில் அவர் பேசிய பேசுகையில், என்னை நாடாளுமன்ற குழு தலைவராக தேர்வு செய்த அனைவருக்கும் நன்றி. தேர்வு செய்யப்பட்டுள்ள அனைத்து எம்பிக்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். புதிய பொறுப்பமைக்க மக்கள் வாய்ப்பு வழங்கி இருக்கிறார்கள். 22 மாநிலங்களில் NDA கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

தேர்தலுக்கு முன்பாகவே உருவான கூட்டணி ஒன்று ஆட்சி அமைப்பது இதுவே முதல்முறை. கடந்த 30 வருடங்களில் அமைந்த இந்திய கூட்டணியில் தற்போதுக்கும் கூட்டணி தான் மிகவும் வலிமையானது. நாட்டின் வளர்ச்சியில் எந்த சமரசமும் நான் செய்ய மாட்டேன். அனைவரும் ஆட்சி நடத்துவோம் கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் அனைத்து கட்சிகளும் சமம் தான். தமிழ்நாட்டில் இருந்து எம்பிக்கள் கிடைக்காத நிலையிலும் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. பாஜகவின் எதிர்காலம் தமிழ்நாட்டில் பிரகாசமாக உள்ளது என்று கூறியிருக்கிறார்.