தமிழகத்தில் உப்பள  தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு தனி நல வாரியம் அமைத்திட தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. உப்பள தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை எழுந்து வந்த நிலையில் தற்போது அது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதன் மூலமாக மற்ற நல வாரியங்களைப் போலவே உப்பள தொழிலாளர்களும் அரசின் உதவிகளை பெறலாம். ஏறத்தாழ 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயன்பெற முடியும். இந்தியாவில் உப்பு தேவையை பூர்த்தி செய்யும் இரண்டாவது மாநிலமாக தமிழகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 9000 மேற்பட்ட உப்பள தொழிலாளர்களைக் கொண்டு தனி நல வாரியம் அமைக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது