நாட்டில் உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும் பணியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. விபத்து மற்றும் பிற காரணங்களால் மூளைச்சாவு அடைவோர்கள் உடலுறுப்பு தானம் செய்தால் அவர்களது சடலம் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த அறிவிப்பை தொடர்ந்து உடலுறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் உடலுறுப்புகளை தானமாக பெற 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.